ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர். இவர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு பென்ஸ், ஹண்டர் போன்ற படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதேசமயம் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே முனி, காஞ்சனா 1,2,3 போன்ற ஹாரர் கலந்த காமெடி படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தை தானே இயக்கி நடித்து தயாரிக்கப் போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதுமட்டுமில்லாமல் இதன் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை மிர்ணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது மிர்ணாள் தாகூரின் முதல் தமிழ் அறிமுக படமாகும். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
மிர்ணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் நடிக்க இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.