Homeசெய்திகள்சினிமாசிவாஜி கணேசனின் மறைவு.... உணர்ச்சிவசப்பட்டு விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை!

சிவாஜி கணேசனின் மறைவு…. உணர்ச்சிவசப்பட்டு விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை!

-

- Advertisement -

நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசனும் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தும் இணைந்து வீரபாண்டியன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். சிவாஜி கணேசனின் மறைவு.... உணர்ச்சிவசப்பட்டு விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை!இந்த படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிவாஜி கணேசன், பாண்டியனாகவும் விஜயகாந்த், மணிமாறனாகவும் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியும் இன்றும் பல ரசிகர்கள் மனதில் நீங்காமல் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜயகாந்த், எம்ஜிஆரை எப்படி நேசித்தாரோ அதேபோல் சிவாஜியையும் நேசித்துள்ளார். அதன்படி கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி சிவாஜி மறைந்த செய்தி வெளிவந்ததும் அப்போதைய நடிகர் சங்க தலைவரான விஜயகாந்தை, சிவாஜியின் மறைவு செய்தியை அறிவிக்க சொல்லியிருக்கிறார்கள். அப்போது அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் நடிகர் விஜயகாந்த், என் அப்பா தவறிவிட்டார் என்று சிவாஜியின் மறைவு செய்தியை அறிவித்திருக்கிறார்.சிவாஜி கணேசனின் மறைவு.... உணர்ச்சிவசப்பட்டு விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை! சிவாஜி மீது விஜயகாந்த் கொண்ட அன்பு எவ்வளவு ஆழமாக இருந்திருந்தால் அவரை தன் அப்பா என்று சொல்லி இருப்பார் என விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை அங்கிருந்த பலரையும் புல்லரிக்க வைத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் சிவாஜியின் மகன்களான ராம்குமார், மற்றும் பிரபு ஆகியோர் சிவாஜியின் மறைவு நாள் செய்வதறியாது கண்கலங்கி நின்றபோது சிவாஜியின் மகன் ஸ்தானத்தில் இருந்து அவருடைய இறுதிச்சடங்கை குடும்பத்தில் ஒருவனாக நின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாராம் விஜயகாந்த். அதுமட்டுமில்லாமல் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தால் சிவாஜியின் உடலை கொண்டு செல்லும் வாகனம் நகர முடியாமல் இருந்த நிலையில் தனி ஒரு ஆளாக கூட்டத்தை கலைத்து சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை நடத்தினார். ஹாலிவுட் கலைஞர்களையே பிரமிக்க வைத்த விஜயகாந்த்..... சுவாரஸ்யம் பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்!இது தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலரும் பெருமையாக பேசியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வந்தது. அது மட்டும் இல்லாமல் நடிகர் பிரபுவும், இந்த விஷயத்திற்காக விஜயகாந்துக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதே சமயம் சிவாஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டதற்கும் விஜயகாந்த் தான் முக்கிய காரணமாம். ஏனென்றால் விஜயகாந்த் தான், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி சிவாஜிக்கு அரசு மரியாதை பெற்று தந்தார் என்று விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் பிரபல தயாரிப்பாளரான கே. விஜயகுமார் நமது ஏபிசி நியூஸ் தமிழ் நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார்.

MUST READ