Homeசெய்திகள்சினிமாமிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்!

-

- Advertisement -

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்! மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை வாழ் மக்கள் இன்னும் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். அவர்களுக்கு பெரும்பாலான திரைப்பட பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதன்படி சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, நிதி உதவிகளை தொடங்கி வைத்தனர். அவர்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், ஜிவி பிரகாஷ், KPY பாலா, வைரமுத்து போன்றவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய சிவகார்த்திகன்! பார்த்திபன், ஆதி நிக்கி தம்பதி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கியும் உதவி வருகின்றனர். மேலும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகத்தினர் மூலம் மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து நடிகரும் அரசியல்வாதியமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நம் தமிழக அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கும் விதமாக பல்வேறு நிறுவனங்களும் இயக்கங்களும் தனி நபர்களும் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று நம்மை சந்தித்த நடிகர், சகோதரர் சிவகார்த்திகேயன் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவருக்கு அன்பும் நன்றியும். ஒன்றிணைந்து செயல்பட்டு இயற்கை பேரிடரால் ஏற்பட்ட துயரை துடைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ