சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் தனது 22 ஆவது படத்தை தொடங்க இருக்கிறார். SK 22 படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு சீதாராமம் படத்தின் மூலம் பிரபலமான மிர்ணாள் தாகூர் நடிக்க உள்ளார். இந்த வாரம் அதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் அனிருத் இசை அமைப்பதற்காக கமிட்டாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.