தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கம் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும் மிஸ்கின், சரிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சாந்தி டாக்கிங் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதைத் தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் இவர் தனது எஸ் கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவன த்தின் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
மேலும் தனது ரசிகர் மன்றங்களின் மூலம் பல்வேறு நற்பணிகளை செய்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் ‘ஷேரூ’ என்ற மூன்று வயது ஆண் சிங்கத்தை தத்தெடுத்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சிங்கத்திற்கு தேவையான ஆறு மாத உணவு மற்றும் இதர செலவுகளுக்கு சிவகார்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அனு என்ற புலியை தத்தெடுதிருந்திருந்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டு அதே புலியை மீண்டும் தத்தெடுத்திருந்தார்.
தற்போது ஒரு சிங்கத்தை தத்தெடுத்து இருக்கும் இவரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.