Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா கூட்டணி!

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா கூட்டணி!

-

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் எஸ்.ஜே. சூர்யா கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா கூட்டணி!மேலும் கேம் சேஞ்சர், எல் ஐ சி, வீர தீர சூரன் போன்ற பல படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

அதாவது கடந்த 2022-ல் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா கூட்டணி!அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வகையில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல்வேறு தரப்பு நேரிடையே பாராட்டுகளை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிபி சக்கரவர்த்தி, இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது.மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா கூட்டணி! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். டான் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா கூட்டணி மீண்டும் இணையா இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ