- Advertisement -
கவின், டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். என்னருகில் சமீபத்தில் கவினுக்கும் அவரின் காதலி மோனிகா டேவிட்டுக்கும் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கவின் – மோனிகா டேவிட் தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு புது மண தம்பதிகளை வாழ்த்தினர்.
குறிப்பாக இயக்குனர் நெல்சன் மற்றும் அவரின் மனைவி, சிவகார்த்திகேயன், ரெடின் கிங்ஸ்லி, KPY குரேஷி, குக் வித் கோமாளி சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.