Homeசெய்திகள்சினிமா25 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் 'அயலான்'...... படக்குழுவுடன் வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

25 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் ‘அயலான்’…… படக்குழுவுடன் வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

-

25 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் 'அயலான்'...... படக்குழுவுடன் வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான் அயலான். சிவகார்த்திகேயனின் 14 வது படமான இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இப்படம் ஐந்து வருடங்கள் கழித்து பல்வேறு தடைகளை தாண்டி 2024 ஜனவரி 12-ம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. 25 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் 'அயலான்'...... படக்குழுவுடன் வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், பானுப்ரியா, இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இசை புயல் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் ஏலியன் ஒன்றை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன், பேண்டஸி கதை களத்தில் வெளியானது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் விதமாக அமைந்த அயலான் திரைப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 25 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் 'அயலான்'...... படக்குழுவுடன் வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!இந்நிலையில் 25 நாட்களைக் கடந்து வெற்றி நடை போடும் அயலான் திரைப்படத்தின் வெற்றியை நடிகர் சிவகார்த்திகேயன் பட குழுவினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ