Homeசெய்திகள்சினிமா'மதராஸி' படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

‘மதராஸி’ படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், மதராஸி படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.'மதராஸி' படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். அதைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தனது சிறந்த நடிப்பினாலும், கடின உழைப்பினாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், காக்கிச்சட்டை, டான், டாக்டர் என பல வெற்றி படங்களை கொடுத்தார். 'மதராஸி' படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!மேலும் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதன்படி தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 17) மதராஸி படத்தில் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது. 'மதராஸி' படக்குழுவுடன் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!இந்நிலையில் மதராஸி படக்குழுவுடன் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ