Homeசெய்திகள்சினிமாவிஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.... ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 'ஜனநாயகன்' - 'பராசக்தி'?

விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்…. ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா ‘ஜனநாயகன்’ – ‘பராசக்தி’?

-

- Advertisement -

தளபதி என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.... ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 'ஜனநாயகன்' - 'பராசக்தி'?அதன்படி ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே 2025 அக்டோபர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டு போஸ்டர்களிலும் ரிலீஸ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் சமூக வலைதளங்களிலும் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு தள்ளிப்போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.... ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 'ஜனநாயகன்' - 'பராசக்தி'?

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு SK 23, பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது 1965 காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தை 2026 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வந்ததாம். ஆனால் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு தள்ளிப்போகும் தகவல் தெரிந்தவுடன் அதற்கு முன்னதாகவே பராசக்தி படத்தை வெளியிடுமாறு சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளாராம்.விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.... ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 'ஜனநாயகன்' - 'பராசக்தி'?

ஏனென்றால் கடந்தாண்டு விஜயின் நடிப்பில் வெளியான கோட் படத்தில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கையில் கொடுத்த பிறகு சிவகார்த்திகேயன் ரசிகர்களால் சின்ன தளபதியாகவே கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் விஜயுடன் சிவகார்த்திகேயன் மோதினால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், பராசக்தி படம், ஜனநாயகன் படத்துடன் மோதக்கூடாது என்பதற்காக இந்த வருட தீபாவளிக்கு பராசக்தி படத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

MUST READ