Homeசெய்திகள்சினிமாகுட் நைட் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்

குட் நைட் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்

-

- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருதாஸூடன் 23-வது படத்தில் நடிக்கிறார். விரைவில் துவங்க இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
படத்திற்காக இரு கதாநாயகிகள் பரிசீலனையில் இருக்கின்றனராம். நடிகை பூஜா ஹெக்டே மற்றும் சீதாராமம் படத்தின் நாயகி மிருனாள் தாகூர் ஆகிய இருவரும் இந்தப் படத்தில் யாரேனும் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும், இதில், மலையாள பிரபலம் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, குட்நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ