சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுடைய மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் மாவீரன் திரைப்படத்தின் டான்ஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் தரப்பில் அயர்லாந்து திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிவகார்த்திகேயன், “அயலான் திரைப்படம் நிச்சயமாக ஒரு புதுவித கதையாக இருக்கும். மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். தற்போது அயலான் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளார். தீபாவளி ரிலீஸ்-க்கு இப்படம் தயாராகி வருகிறது” என்று பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்
, ட்ரைலர் உள்ளிட்ட அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ,இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏலியனை மையமாக வைத்து ஒரு சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.