மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்பொழுது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் மோகன்லால் , டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் நடிப்பில் எம்புரான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கிறது. லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த நிலையில் எம்புரான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
அதன்படி வருகின்ற மார்ச் 27ஆம் தேதி பான் இந்தியாவில் வெளியாக உள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் பிரத்விராஜ், லூசிபர் 2 – எம்புரான் படத்தின் வெற்றிக்கு பிறகு லூசிபர் 3 திரைப்படம் உருவாகும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்விராஜிடம் லூசிபர் 3 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி லூசிபர் 3 படத்தில் தமிழ் நடிகர்களை நடிக்க வைப்பீர்களா? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரித்விராஜ், “லூசிபர் 2 படத்திலேயே சில தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
– If you had an idea to make #Empuraan3, who would you cast from Tamil?
– Tamil actors have acted in the movie #Empuraan.
– If you make Part 3, you can cast actors like #Sivakarthikeyan.
pic.twitter.com/crYqIPDJ1o— Movie Tamil (@MovieTamil4) March 25, 2025
மேலும் அவரிடம் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களை பெரிய நடிகர்களை லூசிபர் 3 படத்தில் நடிக்க வைப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “லூசிபர் 3 பண்ண வேண்டும் என்று ஐடியா இருக்கிறது. கதையில் தமிழ் நடிகர் இருந்தால் கண்டிப்பாக, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார் பிரித்விராஜ்.