Homeசெய்திகள்சினிமாடைம் டிராவல் கதைக்களத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

டைம் டிராவல் கதைக்களத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

டைம் டிராவல் கதைக்களத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!தமிழ் சினிமாவில் டைம் டிராவல் கதைக்களத்தில் தொடர்ந்து பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இன்று நேற்று நாளை, 24, டிக்கிலோனா, அடியே, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய டைம் ட்ராவல் திரைப்படம் உருவாக இருக்கிறது என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 படத்தை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார். டைம் டிராவல் கதைக்களத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!இதற்கிடையில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளதாகவும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படமானது 2026ஆம் ஆண்டில் தொடங்கப்படும் எனவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த படம் சிவகார்த்திகேயனின் 26 ஆவது படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய படமானது டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருக்கிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.

MUST READ