Homeசெய்திகள்சினிமாடாடா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?..... வைரலாகும் புகைப்படம்!

டாடா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?….. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் படத்தில் நடித்து வருகிறார். அதே சமயத்தில் தனது 23 வது படத்திலும் நடித்து வருகிறார். தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். டாடா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?..... வைரலாகும் புகைப்படம்!முழு நீள ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் டாடா பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் தான் டாடா. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். நல்ல ஒரு பீல் படமாக உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே அடுத்த கணேஷ் கே பாபு என்ன படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பாக கணேஷ் கே பாபு, துருவ் விக்ரம், ஜீவா ஆகியோரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்களை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதன் பிறகு வேறு எந்த தகவலும் வெளிவரவில்லை.டாடா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?..... வைரலாகும் புகைப்படம்! இச்சமயத்தில் சிவகார்த்திகேயனும் கணேஷ் கே பாபுவும் இணைந்து எடுத்துள்ள புகைப்படம், வருங்காலத்தில் இருவரும் கூட்டணி அமைக்க இருக்கிறார்களா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி இணைந்தால் நிச்சயம் டாடா படத்தை போல் அப்படமும் வெற்றி பெறும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ