நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி SK 23 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அடுத்தது சில நாட்கள் இடைவெளி விடப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனும் அமரன் படத்திற்கு பிறகு SK 23 படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதாவது சென்னை அருகில் இருக்கும் பெருங்குளத்தூர் மேம்பாலத்தில் சிவகார்த்திகேயன் பாலத்தின் மேலிருந்து கீழே விழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
His smile after those applauses from the crowd !😍❤️🔥🔥🔥🔥#SK23 (#SKxARM) something big is cooking !!💥📈 pic.twitter.com/zp6AmHMVDo
— ꜰᴀᴢɪʟ (@SKFazil_) November 15, 2024
எனவே படப்பிடிப்பை காண ரசிகர்கள் பலரும் திரண்டு வந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் பலரும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் தயாராகி வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.