Homeசெய்திகள்சினிமாசூப்பர் பவர் உள்ள ஹீரோ... ஆக்ஷனில் கலக்கும் சிவகார்த்திகேயன்... மாவீரன் ட்ரைலர் வெளியானது!

சூப்பர் பவர் உள்ள ஹீரோ… ஆக்ஷனில் கலக்கும் சிவகார்த்திகேயன்… மாவீரன் ட்ரைலர் வெளியானது!

-

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

மண்டேலா படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
மாவீரன் என்ற பெயரில் தமிழிலும் மாவீருடு என்ற பெயரில் தெலுங்கிலும் இந்த படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகள் இன்றே தொடங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒரு பேண்டஸி கதை களத்தில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் இந்த படத்தின் டிரைலரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

“இந்த ட்ரெய்லரில் எமனே தவறு செய்தாலும் தட்டி கேட்பேன்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.

மேலும் சிவகார்த்திகேயன் மேலே பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு விதமான பவர் கிடைப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.அத்துடன் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான மாவீரன் படத்தின் டிரைலர் வெளியாகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

MUST READ