Homeசெய்திகள்சினிமாதூத்துக்குடியில் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்.... வைரலாகும் வீடியோ!

தூத்துக்குடியில் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் அயலான் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். தூத்துக்குடியில் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்.... வைரலாகும் வீடியோ!இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். தூத்துக்குடியில் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்.... வைரலாகும் வீடியோ!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்த டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக இந்த படம் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிங்க நடை என்ற தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆக்சன் கடந்த கமர்சியல் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தூத்துக்குடியில் ரசிகர்களை சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ