கன்னட சினிமாவில் 400 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்த படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி தானே இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். தெய்வ நம்பிக்கை என்பதை மையமாக வைத்து வெளியான இந்த படம் பின்னணி இசையாலும் தொழில்நுட்ப காரணங்களாலும் ரசிகர்களை கவர்ந்து ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக காந்தாரா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பியது. அதன்படி காந்தாரா இரண்டாம் பாகத்திற்கு காந்தாரா சாப்டர் 1 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படம் காந்தாரா முதல் பாகத்திற்கு பிரீக்குவலாக ஒருவாக இருக்கிறது. அதன்படி கிபி 301 முதல் 400 காலகட்டங்களில் நடக்கும் கதையாக தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
நடிகை ருக்மினி வசந்த் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK23 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.