Homeசெய்திகள்சினிமாதனது 3வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்..... சிறப்பு வீடியோ வெளியீடு!

தனது 3வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்….. சிறப்பு வீடியோ வெளியீடு!

-

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். தனது 3வது குழந்தைக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்..... சிறப்பு வீடியோ வெளியீடு!இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவருடைய படங்கள் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியான நிலையில் அதைத் தொடர்ந்து அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படமானது 2024 செப்டம்பர் 27-ம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் கடந்த ஜூன் 2ஆம் தேதி மூன்றாவது ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

இதனை அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்த சிவகார்த்திகேயன், தனது மூத்த மகள் ஆராதனாவிற்கும் மூத்த மகன் குகனிற்கும் நீங்கள் தந்த ஆசியும் அன்பையும் தனது மூன்றாவது குழந்தைக்கும் தருமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடைய மூன்றாவது குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டியுள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

MUST READ