கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு, தேமுதிக தலைமையகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று வரையிலும் விஜயகாந்துக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் மறைவின் போது வெளிநாடுகளில் இருந்த திரை பிரபலங்கள் பலரும் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே சென்னை திரும்பியவுடன் விஜயகாந்தின் சமாதிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சிவக்குமார் சூர்யா கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட திரைப்படங்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாலிகிராமத்தில் உள்ள விஜய்காந்தின் இல்லத்திற்கு தனது மனைவியுடன் நேரில் சென்று விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். அத்துடன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மற்றும் விஜயகாந்தின் இரு மகன்களுக்கும். தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.