சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு அந்தஸ்தை உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே டான், டாக்டர் போன்ற படங்களின் மூலம் 100 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கினார். அடுத்தது இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களின் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவ்வாறு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது அடுத்தடுத்த படங்களை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பல வெற்றி படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்திலும் இவர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் ஏற்கனவே தளபதி 69 படத்தின் இயக்குனர் ஹெச். வினோத், சிவகார்த்திகேயனை சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து போனதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களில் இவர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் லைன் அப்பில் பல படங்கள் இருக்கும் நிலையில் ஹெச். வினோத்தும் தளபதி 69 படத்திற்கு பிறகு தனுஷை இயக்க திட்டமிட்டுள்ளதால் எதிர்காலத்தில் இவர்களது கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.