Homeசெய்திகள்சினிமாசிங்கமாய் கர்ஜிக்கும் சிவகார்த்திகேயன்.... 'அமரன்' டப்பிங் வீடியோ வைரல்!

சிங்கமாய் கர்ஜிக்கும் சிவகார்த்திகேயன்…. ‘அமரன்’ டப்பிங் வீடியோ வைரல்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் டப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிங்கமாய் கர்ஜிக்கும் சிவகார்த்திகேயன்.... 'அமரன்' டப்பிங் வீடியோ வைரல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் SK23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கிடையில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். சிங்கமாய் கர்ஜிக்கும் சிவகார்த்திகேயன்.... 'அமரன்' டப்பிங் வீடியோ வைரல்!ராணுவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. எனவே அதற்காக முழு வீச்சில் தயாராகி வரும் அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் கசிந்திருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், வெறித்தனமாக டப்பிங் பேசி இருக்கிறார். உண்மையில் போர்க்களத்தில் இருப்பது போன்ற கர்ஜனையை கண்முன் காட்டியிருக்கிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ