Homeசெய்திகள்சினிமாதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு தற்காலிகமாக SK 25 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயனிடம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!அதற்கு சிவகார்த்திகேயன், “அதைப் பற்றி எங்கு பேச வேண்டாம். வேறு எங்கேயாவது பேசலாம். இது போன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது என்று தான் நாம் அனைவரும் நினைக்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தான் நாம் உறுதுணையாக நிற்க வேண்டும். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என நம்புவோம். கடவுளிடமும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ