Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ... முதல் நாள் வசூல் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ … முதல் நாள் வசூல் அப்டேட்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் முதல் நாள் வசூல் அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ... முதல் நாள் வசூல் அப்டேட்!

சிவகார்த்திகேயனின் 21 வது படமாக உருவாகி இருந்த அமரன் திரைப்படம் நேற்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைக்கு கொண்டுவரப்பட்டது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். ஏற்கனவே சொல்லப்பட்டதன் படி இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு தொடர்ந்து சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம் அவருக்கு இணையாக நடிகை சாய் பல்லவியும் வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதேசமயம் படத்தில் எமோஷனல் காட்சிகளும் காதல் காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ... முதல் நாள் வசூல் அப்டேட்!மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 25 கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் உலக அளவில் 28 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துவரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ