நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவருடைய படங்கள் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமையும். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நேற்று இதன் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்த வருகிறார். SK21 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க, ராகுல் போஸ் வில்லனாக நடிக்கிறார்.
மேலும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் கிளீன் சேவ் செய்து புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் கூடுதல் தகவலாக, இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய இருப்பதாகவும், இன்னும் பத்து சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.