Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்.... இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்…. இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

-

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்.... இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான்.... இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்த அயலான் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இது குறித்து அறிவிப்பை பட குழுவினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்சன் கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார்.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்தின் டீசர், அதைத் தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கள்  வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் அயலான் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது பாடல் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

MUST READ