மதராஸி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு அமரன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிக்கிறார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மதராஸி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், காக்கி சட்டை, அமரன், பராசக்தி போன்ற படங்களுக்கு பழைய படங்களின் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் 23 வது படத்திற்கும் மதராஸி என்று பழைய படத்தின் தலைப்புதான் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். மேலும் விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய மற்ற படங்களில் ஹீரோக்களை எப்படி மாஸாக காட்டுவாரோ அதேபோல் தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயனையும் காட்டுகிறார். இது இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் படக்குழு தற்போது புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் வெவ்வேறு பரிமாணங்களில் காட்டப்பட்டுள்ளார். எனவே அமரன் படத்திற்கு பிறகு மதராஸி திரைப்படமும் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த புதிய போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.