Homeசெய்திகள்சினிமாமுடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கருத்து வேறுபாடு... இந்த மாதம் நடைபெறும் 'SK...

முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கருத்து வேறுபாடு… இந்த மாதம் நடைபெறும் ‘SK 25’ பட பூஜை!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கருத்து வேறுபாடு... இந்த மாதம் நடைபெறும் 'SK 25' பட பூஜை! எனவே நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள SK 25 படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது சுதா கொங்கராவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனின் தாடியை ட்ரிம் செய்து வருமாறு சொன்னதாகவும் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிக்க இருந்ததால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் கசிந்தது. அதன் பிறகு சிவகார்த்திகேயன், சுதா கொங்கராவின் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை எனவும் தொடர்ந்து பல தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இது குறித்த புதிய தகவல் என்னவென்றால் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கராவிற்கு இடையேயான அந்த பிரச்சனை அப்பொழுதே முடிவுக்கு வந்ததாகவும் இந்த மாதம் SK 25 படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. முடிவுக்கு வந்த சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கருத்து வேறுபாடு... இந்த மாதம் நடைபெறும் 'SK 25' பட பூஜை!மேலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் ஜெயம்ரவி வில்லனாக நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ