Homeசெய்திகள்சினிமா'எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு உணர்ச்சிப்பூர்வமானது'...... நடிகர் சிவகார்த்திகேயன்!

‘எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு உணர்ச்சிப்பூர்வமானது’…… நடிகர் சிவகார்த்திகேயன்!

-

'எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு உணர்ச்சிப்பூர்வமானது'...... நடிகர் சிவகார்த்திகேயன்!நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அந்த வகையில் தனது கடின உழைப்பினால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். அதேசமயம் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் இவர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு உணர்ச்சிப்பூர்வமானது'...... நடிகர் சிவகார்த்திகேயன்!இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நேற்று தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் SK23 படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கேக் வெட்டியும் பிரியாணி விருந்து அளித்தும் கொண்டாடினார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 'எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு உணர்ச்சிப்பூர்வமானது'...... நடிகர் சிவகார்த்திகேயன்!அந்த அறிக்கையில், “எனது பிறந்தநாளுக்கு நீங்கள் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் மன நிறைவாகவும் இருந்தது. எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அமரன் டீசர் மூலம் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய என் தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசன் சார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட அமரன் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. அதே நாளில் எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய ஏ ஆர் முருகதாஸ் சார் மற்றும் SK23 படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. எனது அன்பான ரசிகர்கள், சகோதர, சகோதரிகள் உங்கள் அனைவரின் இந்த அளவு கடந்த அன்பு தான் என்னை இன்னும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. மீண்டும் ஒருமுறை இதயம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ