Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'அமரன்' பட இசை வெளியீட்டு விழா எப்போது?

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட இசை வெளியீட்டு விழா எப்போது?

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயனின் 'அமரன்' பட இசை வெளியீட்டு விழா எப்போது?

சிவகார்த்திகேயனின் 21 வது படமாக அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் 'அமரன்' பட இசை வெளியீட்டு விழா எப்போது?மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதே சமயம் சிவகார்த்திகேயனின் மற்ற படங்களை போல் இல்லாமல் இந்த படம் சிவகார்த்திகேயனை மாறுபட்ட கோணத்தில் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர காத்திருக்கிறது. மலேசியா பறக்கும் 'அமரன்' படக்குழு.... இன்னும் மூன்று நாட்களில் முதல் பாடல்!இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளனர். அடுத்தது இந்த படத்தில் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ