அமரன் திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெளித்தரைக்கு வந்த சிவகார்த்திகேயன் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமையும். அந்த வரிசையில் அமரன் திரைப்படமும் இணைந்துள்ளது. இருப்பினும் மற்ற படங்களைப் போல் அல்லாமல் அமரன் திரைப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு கேரியர் பெஸ்ட் படமாக அமைந்திருக்கிறது. இவருக்கு இணையாக நடிகை சாய்பல்லவியும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இந்த படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த நிலையில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தையும் படக் குழுவினர்களையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் மூன்று நாட்களில் உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் 50 கோடியை கடந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமரன் திரைப்படமும் 100 கோடியை கடந்திருக்கும் நிலையில் விரைவில் அதிக வசூலை ஈட்டித் தரும் என நம்பப்படுகிறது.