Homeசெய்திகள்சினிமாபெரும் தொகைக்கு அமரன் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்

பெரும் தொகைக்கு அமரன் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்

-

சின்னத்திரையில் தொடங்கி, வெள்ளித்திரையில் இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி ஹிட் கொடுத்து வருகிறார். சிவா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அயலான். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வௌியானது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி.

தற்போது இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைத்து டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தை தடை செய்யக்கோரி பலரும் போர்க்கொடி தூக்கினர்.

இந்நிலையில், அமரன் திரைப்டத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓடிடி உரிமை குறித்த அப்டேட் வௌியாகி உள்ளது. அதன்படி, அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 60 கோடி ரூபாய் கொடுத்து கைபற்றி உள்ளது.

MUST READ