நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது நடிப்பினாலும் திறமையினாலும் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயலான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் அயலான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் 50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.
அதேசமயம் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK21 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜனவரி 26 அன்று வெளியாக இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 23 வது படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றன.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் மீண்டும் அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் அயலான் 2 படம் நிச்சயம் வரும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குடும்பங்கள் கொண்டாடும் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்திலும் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்திலும் தனது அடுத்தடுத்த படங்களை நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின்றன.
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் ரஜினியுடன் இணைந்து தலைவர் 171 படத்திலும் நடிக்க இருக்கிறாராம். எனவே சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களில் செய்யப் போகும் சம்பவத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.