Homeசெய்திகள்சினிமாமக்களை கவர்ந்தாரா "மாவீரன்"..? விமர்சனம் இதோ!

மக்களை கவர்ந்தாரா “மாவீரன்”..? விமர்சனம் இதோ!

-

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின், யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாத கோழை, மக்கள் பிரச்சினைக்காக வீரனாக மாறுகின்றான். இறுதியில் அந்த வீரன் மக்களை காப்பாற்றினானா என்பது மாவீரன் படத்தின் முழு நீள கதையாகும்.

கூவம் நதிக்கரை ஓரம் குடிசை வீடுகளில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் சார்பாக அப்பார்ட்மெண்ட் கட்டித் தரப்படுகிறது. அந்த மக்களும் சொந்த இடத்தை விட்டு அந்த அப்பார்ட்மெண்ட்டிற்கு குடியேறுகிறார்கள். ஆனால் அந்த வீடு தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் அந்த வீட்டில் ஒரு ஆணி கூட அடிக்க முடிவதில்லை. வீட்டின் கதவு ,சுவர் அனைத்தும் தரமற்றதாக இருந்த அந்த அப்பார்ட்மெண்டில் குடியேறும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த சமயங்களில் கோழையாக எந்த வம்புக்கும் செல்லாமல் இருக்கும்  சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய சம்பவம் அவரை வீரனாக மாற்றுகிறது.

இந்த படம் முழுவதும் சமூக கருத்துக்களை கூறும் விதத்தில் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படத்தின் கதை நகர்கிறது. சிவகார்த்திகேயன் தனது முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாதி சுவாரசியமாக செல்கிறது. யோகி பாபுவின் காமெடி சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்திருக்கிறது. நடிகை சரிதா நீண்ட காலங்களுக்குப் பிறகு நடித்திருந்தாலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். மிஷ்கின் ஒரு அமைச்சராக தனக்கான கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளார். அதிதி சங்கரின் ஒரு சில காட்சிகள் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் படத்திற்கு பலம் அளிக்கிறது. இரண்டாம் பாதியில் ஆக்சன் காட்சிகளும் சென்டிமென்ட்களும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் பாதியில் சில தடைகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகள் அதை ஓரளவிற்கு சரி செய்து விடுகின்றன. குறிப்பாக சிவகார்த்திகேயன் வானத்தை பார்க்கும்போது ஒலிக்கும் அசரீரி குரலாக வரும் விஜய் சேதுபதியின் குரல் இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் இந்த படத்தை ஒரு வித்தியாசமான படமாக மாற்றி உள்ளது.
மாவீரன் படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலுவூட்டியுள்ளது. மொத்தத்தில் ஒரு முறை குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்கலாம்.

MUST READ