Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்..... டைட்டில் என்ன?

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்….. டைட்டில் என்ன?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அயலான். சயின்ஸ் பிக்சன் கலந்த பேண்டஸி படமாக உருவாகி இருந்த இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்..... டைட்டில் என்ன?இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதே சமயம் ராணுவம் தொடர்பான கதை களத்தில் உருவாகி வருவதால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்..... டைட்டில் என்ன?அதாவது போர்க்களத்தில் சிங்கம் என்று படத்திற்கு டைட்டில் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி, ராணுவம் சம்பந்தமான மேலும் இரண்டு தலைப்பை, இதன் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை கமல்ஹாசன் SK21 படத்தின் தலைப்பாக தேர்வு செய்வார் எனவும் செய்திகள் கூறுகின்றன. சிவகார்த்திகேயனின் SK21 படத்திற்கு எந்த மாதிரியான தலைப்பு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த தகவல் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் படத்திற்கு எந்த மாதிரியான டைட்டில்லை கமல்ஹாசன் தேர்வு செய்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ