Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'SK23' கிடப்பில் போடப்பட்டுள்ளதா?

சிவகார்த்திகேயனின் ‘SK23’ கிடப்பில் போடப்பட்டுள்ளதா?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய நடிகர்களின் ஒருவராக அறியப்படுபவர். இவரது நடிப்பில் கடைசியாக அயலான் எனும் திரைப்படம் வெளியானது.சிவகார்த்திகேயனின் 'SK23' கிடப்பில் போடப்பட்டுள்ளதா? அடுத்தது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதே சமயம் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் 'SK23' கிடப்பில் போடப்பட்டுள்ளதா?இந்த படத்திற்கு சிங்க நடை என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் சிக்கந்தர் மற்றும் SK23 ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்து முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.சிவகார்த்திகேயனின் 'SK23' கிடப்பில் போடப்பட்டுள்ளதா? ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, ஏ ஆர் முருகதாஸ் சிக்கந்தர், திரைப்படத்தை முடித்த பின்னர்தான் SK23 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவாராம். இதனால் இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்கள் பலரும் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயனை படத்தை முடித்துக் கொடுக்காமல் தவிக்க விட்டுவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ