சிவகார்த்திகேயனின் SK 25 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதன்படி தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் தற்போது SK 23 படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்தது SK 24, SK 25 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ள SK 25 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள நிலையில் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் ஆதி பகவன் எனும் திரைப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார் ஜெயம் ரவி. மேலும் SK 25 படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர தான் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக புதிய அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை 60 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.