சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நாளை (நவம்பர் 14) உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் சூர்யா இரட்டை இடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பீரியாடிக் கதைக்களத்தில் தயாராகி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியான டீசர், ட்ரெய்லர், ரிலீஸ் ட்ரெய்லர் போன்றவை எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இந்நிலையில் தான் சமீபத்தில் கங்குவா படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரபல நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய சிவக்குமார், “சூர்யா நடித்ததிலேயே கங்குவா படம் தான் மிகப்பெரிய உயரம். இதைத் தாண்டுவது அவருடைய பெரிய சவால். பள்ளிப்படிப்பு முடிந்ததும் லயோலா காலேஜில் பி.காம் பட்டப்படிப்பில் சேர்க்க சென்றேன். அப்போது கல்லூரி முதல்வர் இடம் தர மறுத்துவிட்டார். சிவாஜிகணேசன் மகன் டிகிரி வாங்கவில்லை, பாலாஜி மகன் டிகிரி வாங்கவில்லை, உங்க மகனும் வாங்க மாட்டார் என்று சொன்னார். என் மகன் கண்டிப்பாக வாங்குவான் என கெஞ்சி சீட் வாங்கி கொடுத்தேன். அப்போது இறுதி ஆண்டில் சூர்யா 4 அரியர் வைத்திருந்தார்” என்று கூறியதும் அப்பா இப்படி மானத்தை வாங்கிட்டியே என்று சொல்வதைப் போல் ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். அது மிகவும் க்யூட்டாக இருந்தது. தொடர்ந்து பேசிய சிவக்குமார், “மானம் போய்விடும் என சூர்யாவிடம் சொன்ன பிறகு பி. காம் பாஸ் பண்ணி டிகிரி வாங்கிவிட்டார்” என்று கூறினார். மேலும் இந்த படம் பெரிய வெற்றி பெற படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் சிவக்குமார்.