ரெட்ரோ ஆடியோ லான்சில் சிவகுமார், சூர்யா குறித்து பேசி உள்ளார்.
சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. காதல் – ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் எந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் நேற்று (ஏப்ரல் 19) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இணைந்து பிரபல நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய சிவகுமார், “சூர்யாவிற்கு 17 வயதில் பள்ளியில் படிக்கும்போது ஜாதகத்தில் உங்கள் மூத்த பையன் கலைத்துறையில் பெரிய ஆளாக வருவான் என்று சொன்னார்கள். அப்போது சூர்யா நான் நடிகராக வருவேனா என்று அதை நம்பாமல் சிரித்தார். இயக்குனர் வசந்த் சூர்யாவை பார்த்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு உங்க மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டால். வாய்ப்பே இல்லை என்று சொன்னேன். சூர்யாவும் முதலில் பயந்தார். 22 வயது வரைக்கும் சூர்யா, என்னுடன் ஷூட்டிங்கை வந்து பார்த்ததில்லை. சூர்யா படத்தில் நடிக்க தொடங்கினார். சூர்யாவின் கண்கள் பல பெண்களின் தூக்கத்தை கெடுக்கப் போகிறது என்று சொன்னார்கள்.
Father #Sivakumar‘s Elevation for Son #Suriya ..🔥:
“I’m saying this humbly.. Is there any other actor in Tamilnadu who had Six pack before #Suriya ..❓💥 Even Karthi didn’t have Six packs..”pic.twitter.com/fjgWMCkfPJ
— Laxmi Kanth (@iammoviebuff007) April 18, 2025
என் மகனை நடிகனாக்கிய வசந்தின் பாதம் தொட்டு வணங்குகிறேன். சூர்யா முழுமையான நடிகனாக வேண்டும் என தினமும், நடனம், சண்டை பயிற்சி மேற்கொள்வார். தமிழ்நாட்டில் சூர்யாவிற்கு முன்பாக எந்த நடிகராவது சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்களா? கார்த்தி கூட சிக்ஸ் பேக் வைத்திருக்கிறாரா? இப்படி ஒரு மகத்தான நடிகனை உருவாக்கிய கார்த்திக் சுப்பராஜ் உட்பட அத்தனை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ரெட்ரோ படம் மாபெரும் வெற்றி பெற ரசிகர்களின் பேராதரவு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.