Homeசெய்திகள்சினிமாமுதியவரின் சால்வையை தூக்கி வீசிய சிவக்குமார்... வெறுப்புடன் வீசிய காணொலி வைரல்...

முதியவரின் சால்வையை தூக்கி வீசிய சிவக்குமார்… வெறுப்புடன் வீசிய காணொலி வைரல்…

-

நடிகர் சிவக்குமார், அவருக்கு முதியவர் ஒருவர் ஆசையாய் போட வந்த சால்வையை தூக்கி வீசிய காணொலி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார். நாயகன், குணச்சித்திரம் என கிட்டத்தட்ட 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். சில படங்களில் அவர் முருகன் வேடத்திலும், கடவுள் வேடத்திலும் நடித்திருக்கிறார். இவை சிவக்குமாரின் அடையாள கதாபாத்திரங்கள் ஆகும். இவர் நடிப்பு மட்டுமன்றி, சொற்பொழிவு, மேடை பேச்சும் ஆற்றி வருகிறார். 1965-ம் ஆண்டு காக்கும் கரங்கள் மூலம் அறிமுகமானார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி, இருவருமே கோலிவுட் திரையுலகின் இரு பெரும் தூண்கள் என்றே சொல்லலாம். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் முன்னணி நடிகையாவார். இவரும் தற்போது திரைப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். நட்சத்திர குடும்பமாக சிவக்குமாரின் குடும்பம் உள்ளது. தற்போது நடிப்பதை நிறுத்திவிட்ட சிவக்குமார், அவ்வபோது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்படி அங்கு செய்யும் சில சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் சிவக்குமார் பங்கேற்று உள்ளார். அங்கு உரை ஆற்றியபின், அவர் புறப்படும்போது, முதியவர் ஒருவர் அவருக்கு சால்வை அணிவிக்க நெருங்கி வந்தார். அவர் தந்த சால்வையை பிடுங்கி வெறுப்புடன் வீசி எறிந்தார் சிவக்குமார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசை ஆசையாய் வந்த முதியவரின் பரிசை உதாசினப்படுத்தி நடிகர் சிவக்குமாரின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

MUST READ