Homeசெய்திகள்சினிமாநானி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம்

நானி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம்

-

நானி நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ‘நிழலிலேயே’ மற்றும் நான்னா என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஹாய் நான்னா படத்தைத் தொடர்ந்து நடிகர் நானி 31-வது திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்குகிறார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனுடன் போஸ்டர் ஒன்றையும் வௌியிட்டுள்ளது.
தமிழில் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடுத்தடுத்து மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், இந்த படத்திலும் அவர் நானிக்கு வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ