எஸ்ஜே சூர்யா தன் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் சமீப காலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜயின் 68-வது படத்திலும் தனுஷின் 50-வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இதற்கிடையில் இவர் நீண்ட நாட்களுக்கு முன்பாக ‘பொம்மை’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இருவரும் மான்ஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளனர். மேலும் இப்படம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ளது.
சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
#BOMMAI gearing up for release🥰🥰🥰🥰🥰🥰 Update tomorrow 6pm👍👍👍stay tuned 💐💐💐💐💐🙏sjs
— S J Suryah (@iam_SJSuryah) May 31, 2023
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து நீண்ட காலமாக ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் “பொம்மை திரைப்படம் ரிலீஸ் ஆக தயாராகிவிட்டது. இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியாக உள்ளது” என எஸ் ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.