நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். அதன்படி இவர் இயக்கியிருந்த வாலி, குஷி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது நடிப்பிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அதேசமயம் ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த வகையில் இவர், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். அடுத்தது கேம் சேஞ்சர், சர்தார் 2, வீர தீர சூரன் என பல பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. கடைசியாக ராயன், சூர்யாவின் சனிக்கிழமை போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். அதன்படி ஏற்கனவே நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து மலையாள படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. எனவே இந்த படத்தின் மூலம்தான் எஸ்.ஜே. சூர்யா மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் துல்கர் சல்மான் நடிக்க உள்ள புதிய படத்தின் மூலம்தான் எஸ்.ஜே. சூர்யா மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆகையினால் துல்கர் சல்மான், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை ஆர் டி எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.