Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா .....வெளியான புதிய தகவல்!

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா …..வெளியான புதிய தகவல்!

-

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி இந்த படத்தில் மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா .....வெளியான புதிய தகவல்!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி தவிர மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா .....வெளியான புதிய தகவல்!மேலும் விடுதலை 2 படமானது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இதில் நடிகர் எஸ் ஜே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் அழுத்தியுள்ளது.

நடிகர் எஸ் ஜே சூர்யா, தற்போது எல்ஐசி, வீர தீர சூரன் போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ