Homeசெய்திகள்சினிமாவிக்ரமுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா... வெளியானது அதிரடி அறிவிப்பு...

விக்ரமுடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா… வெளியானது அதிரடி அறிவிப்பு…

-

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘CHIYAAN 62′ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.

கோலிவுட்டில் சியான் என்று ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படும் நாயகன் விக்ரம். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தங்கலான். இப்படத்தை பா ரஞ்சித் இயக்கி உள்ளார். படத்தில் விக்ரமுடன் இணைந்து, மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

 

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, விக்ரம் நடிக்கும் 62 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு சியான் 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்குகிறார். ரியா ஷிபு படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் அறிவிப்பு காணொலி, கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படத்தில் இவர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ