Homeசெய்திகள்சினிமாஷாருக்கானுடன் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா......காரணம் என்ன?

ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா……காரணம் என்ன?

-

- Advertisement -

நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஷாருக்கானுடன் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா......காரணம் என்ன?

நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக திரைத்துறையில் நுழைந்திருந்தாலும் நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி பல படங்களில் ஹீரோவாக இவர் நடித்திருந்தாலும் சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்தில் பட்டய கிளப்பி விடுகிறார் எஸ் ஜே சூர்யா. எனவே நடிப்பு அரக்கன் என்று கொண்டாடப்படும் எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். பல பெரிய படங்களுக்கு வில்லனாக கமிட் ஆகி வருகிறார் எஸ் ஜே சூர்யா. அந்த வகையில், வீர தீர சூரன், சர்தார் 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் எஸ் ஜே சூர்யா ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது. அதாவது ஷாருக்கான் , சுஜோய் கோஷ் இயக்கத்தில் கிங் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த எஸ்.ஜே. சூர்யா......காரணம் என்ன? இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் தான் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதேபோல் படக்குழுவினரும் எஸ் ஜே சூர்யாவை அணுகியுள்ளனர். அவரிடம் 40 முதல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால் எஸ் ஜே சூர்யா படு பிசியான நடிகராக வலம் வருவதால் அவ்வளவு நாட்கள் கால்ஷீட் தர முடியாது என்ற காரணத்தால் ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஷாருக்கானின் கிங் படத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ