எஸ்.ஜே. சூர்யா, இயக்குனர் அருண்குமார் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்கள் தான் வேற லெவல் ஹிட் அடிக்கும். அந்த வகையில் தற்போது இவர் வீர தீர சூரன் பாகம் 2 படத்தில் வில்லனாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. மேலும் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் வருகின்ற மார்ச் 27 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் உள்ளிட்ட மற்ற பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
SJSuryah: There is a scene in #VeeraDheeraSooran which i thought performed well in my style, but the director said to perform it Normally in subtle manner😀
ChiyaanVikram: VDS will be one of the finest performance of SJSuryah sir📈. Even with dubbing & every dialogue, he… pic.twitter.com/d8cvm58iuG
— AmuthaBharathi (@CinemaWithAB) March 18, 2025
இந்நிலையில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, அருண்குமார், துஷாரா, சுராஜ் ஆகியோர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த பேட்டியில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “இந்த படத்தில் ஒரு காட்சி இருக்கிறது. அதில் நான் என்னுடைய ஸ்டைலில் நல்லா பண்ணியிருக்கிறேன் என்று நினைத்தேன். ஆனால் டைரக்டர் அருண்குமார் என்னிடம் வந்து, அந்த காட்சியில் சாதாரணமாக நடிக்க சொன்னார்” என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய விக்ரம், எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய நடிப்பை மட்டுமல்லாமல் அவர் பேசும் டயலாக்கையும் கூட அடுத்த கட்டத்திற்கு உயர்த்திவிடுவார் என்று கூறியுள்ளார்.