நடிகர் எஸ்.ஜே. சூர்யா, கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி பாடல் குறித்து பேசி உள்ளார்.எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக கலக்கி வருகிறார். அந்த வகையில் மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக பட்டைய கிளப்பு இருந்தார் எஸ்.ஜே. சூர்யா. அடுத்தது வீர தீர சூரன் போன்ற பல படங்களை வில்லனாக நடித்து வருகிறார். அதே சமயம் இவர், ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஜரகண்டி பாடல் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் எஸ் ஜே சூர்யா பேசியுள்ளார்.
“#GameChanger total budget is 400-500 Crs excluding the interest😲. I was blown away by the Visuals of Jaragandi song🤯. Whatever audience is paying, will be worth for that song itself. Girls & Boys will go mad for #RamCharan & #KiaraAdvani♥️”
– SJSuryah pic.twitter.com/Ax98pCKDvR— AmuthaBharathi (@CinemaWithAB) January 7, 2025
அவர் பேசியதாவது, “கேம் சேஞ்சர் படத்தை இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார். அதிலும் ஜரகண்டி பாடலை முழுமையாக பார்த்தேன். ரசிகர்களின் பணம் அந்த ஒரு பாடலுக்காகவே சரியாக போய்விடும். ராம்சரண், கியர் அத்வானி வாங்க சம்பளமா அந்த ஒரு பாடலுக்கே சரியாக இருக்கும். இந்த பாடலை அனைவரும் விரும்புவார்கள். சங்கர் இந்த பாடலை பிரம்மாண்டமாக எடுத்து மிரட்டி இருக்கிறார். மேலும் மொத்த படமும் போனஸ் ஆக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.