தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக மிரட்டி வருபவர் எஸ்.ஜே. சூர்யா. கடைசியாக வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஷாம்.சி.எஸ் இசையமைக்க ஜார்ஜ் சி வில்லியம்ஸ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கடந்த 2022-ல் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நலையில் தற்போது உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்க் 31) இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். மேலும் இது தொடர்பாக சென்னையில் விழா ஒன்றும் நடத்தப்படுகிறது. அந்த விழாவில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, சர்தார் 2 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “மித்ரன் சார் எனக்கு கதை சொல்ல வருகிறார் என்று கால் வந்தது. சர்தார் 1 படமே எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அதனால் சர்தார் 2 படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
#SJSuryah about #Sardar2
– #Sardar 1 is my favourite film, I also excited for the sequel.
– PSMithran sir come & narrated the story to me, After the narration i’am Very happy, immediately I said OK to Sardar 2.#Karthipic.twitter.com/kQB2gw34sX— Movie Tamil (@MovieTamil4) March 31, 2025
மித்ரன் சாரை கதையை சொன்னார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. உடனே படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரம். மித்ரன் சார் அதை வடிவமைத்த விதம் அப்படி. சர்தாருக்கு உண்டான இலக்கு, முயற்சி எல்லாமே சேர்ந்து ஒரு அழகான படமாக வந்திருக்கிறது. ஒரு ஏஜென்ட் ஸ்பை என்பது ஒரு ஹாலிவுட் தரமான விஷயம். அதை நம் ஊர் மக்களுக்கு கனெக்ட் ஆகுற மாதிரி, புரிகிற மாதிரி, குறிப்பாக என்டர்டெயின் பண்ற மாதிரி எடுத்து இருக்காரு” என்று தெரிவித்துள்ளார்.